logo

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.C.பழனி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

07/01/2024
Collector Office - Villuppuram
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.C.பழனி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் நடத்திய 39-வது பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் விழுப்புரம், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கைப்பந்து, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், ஜூடோ, கோலூன்றி தாண்டுதல், நீச்சல், குத்துச்சண்டை, ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், டைக்குவாண்டோ, சிலம்பம், குண்டு எறிதல், வட்டு எறிதல், போன்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் வெற்றி பல பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் இருந்து அதிகளவு மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும். அதுமட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் (OVERALL CHAMPIONSHIP) பெற்றுள்ளனர் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.C.பழனி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பள்ளி செயலாளர் திரு.P.K.ஜனார்த்தனன், பள்ளி முதல்வர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தமிழ்மணி உடனிருந்தனர்.