logo

தமிழ் வளர்ச்சித் துறை போட்டி

25/06/2023
villupuram
தமிழ் வளர்ச்சித் துறை போட்டி

தமிழக அரசு - தமிழ் வளர்ச்சித் துறை போட்டியில் நம்பள்ளி மாணவர்கள் வெற்றி தமிழக அரசு - தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 23.06.2023 அன்று மாவட்ட அளவில் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மணிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்களான ஏ.திவ்யா, கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று ரூபாய் 7000-க்கான காசோலையும் ச. ஷியாஷினி, கவிதைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று ரூபாய் 5000- க்கான காசோலையையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் கு.ப.சத்திபிரியா அம்மையாரிடம் பெற்றனர்.இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன.வெற்றிப்பெற்ற மாணவர்களை பள்ளிச் செயலாளர் P.K.ஜனார்த்தனன், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.