விழுப்புரம் ஜெயேந்திரா பள்ளி மாணவன் மத்திய பிரதேச மாநிலம் சுஜலாப்பூர்-ல் நடைபெறும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு தேர்வு. தேர்வு பெற்ற மாணவனை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. பழனி, இ.ஆ.ப மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மேல்நிலை பள்ளியின் தாளாளர் திரு. J. பிரகாஷ் , செயலாளர் திரு. P.K.ஜனார்தனன் வாழ்த்தினர் இந்திய பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு குழுமம் சார்பாக (SGFI) 17 வயது மாணவர்களுக்கான மாநில அளவிலான தெரிவிப்போட்டி நாகப்பட்டினம் மாவட்டம் SDAT மைதானத்தில் நடைபெற்றது மண்டல அளவில் தெரிவு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநிலப் போட்டியில் கலந்து கொண்டனர் இப்போட்டியில் விழுப்புரம், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவன் K. S. கேல்வின்பால் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய பிரதேச மாநிலம் சுஜலாப்பூர்-ல் நடைபெறும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழகத்தின் சார்பாக கலந்து கொள்கிறார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . தேர்வு பெற்ற மாணவனை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. பழனி, இ.ஆ.ப மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மேல்நிலை பள்ளியின் தாளாளர் திரு. J. பிரகாஷ் , செயலாளர் திரு. P.K.ஜனார்தனன் வாழ்த்தினர் .இந்நிகழ்வில் பள்ளி முதல்வர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் உடனிருந்தனர்.